Tuesday, September 19, 2006
பெரியார் இன்று இருந்தால் ……..

ஆரியம் திராவிடத்தை அடக்கி, அடிமைப்படுத்தி, முட்டள்களாக வைத்திருந்த காலத்தில், ஆரியத்தை எதிர்த்து ஒரு கடும் போராட்டத்தை நடத்தி அதில் வெற்றியும் பெற்றவர் பெரியார். அன்று பெரிய ஆதிக்க சக்தியாக இருந்தது ஆரியம். பெரியாரின் கொள்கைகள் அங்கீகரிக்கப்படவே அவர் சார்ந்தோர் கடினமாக உழைக்க வேண்டியிருந்த காலம் அது. ஆனால் இன்று திராவிடத்தின் அநேக இடங்களிலும் திராவிடனே ஆதிக்க சக்தியாக இருப்பது பெரியார் கண்ட கனவு மெய்ப்பட துவங்கியதற்கான அடையாளமே. இன்று தமிழகத்தில் இருக்கும் ஒரு சில அமைப்புகள் தவிர அனேகமாக அனைத்துக் கட்சிகளுக்குமே அடித்தளமாக இருப்பது பெரியாரியக் கொள்கைகளே. பொல்லாங்கு பேசுபவராக திராவிடர்களாலேயே கருதப்பட்ட ஒருவரது கொள்கைதான் இன்று நாட்டையே வழிநடத்துகிறது என்றால் அது எவ்வளவு பெரிய வெற்றி.
ஆனால், பெரியார் இன்று இருந்தால் அவரது போராட்டம் ஆரியத்தை எதிர்த்த போராட்டமாக இருந்திறுக்காது, திராவிடத்தை எதிர்த்த போராட்டமாகவே இருந்திறுக்கும். ஆம், சற்றே சிந்தித்தோமேயானால் இன்றும் திராவிடன் வென்று விடவில்லை. ஆரியம் வகுத்துக்கொடுத்த பிரிவினையின் அடயாளங்கள் இன்னும் அதிகமாகவே வேறூன்றிவிட்ட காரணத்தால், இங்கே ஒரு பலம் வாய்ந்த திரவிடன் ஒரு பலம் குறைந்த திராவிடனை அடக்கி ஆண்டுகொண்டுதான் இருக்கிறான். பெரியார் இன்று இருந்தால் கண்டிப்பாக அவரது போராட்டம் திராவிடத்தை அடக்கியாளும் திராவிடத்தை எதிர்த்தே இருந்திறுக்கும். பெரியாரியவாதிகளின் இன்றைய கடன் ஆரியத்தை எதிர்த்த போராட்டத்தில் அதிகம் கவனம் செலுத்துவதை விட திராவிடத்தை அடக்கியாளும் திராவிடத்தை எதிர்க்கும் போராட்டத்தில் அதிகம் கவனம் செலுத்தவேண்டும். மேடுபள்ளமில்லாத ஒரு திராவிடம் மலருமேயானால் அது பெரியாரியக் கொள்கைகளின் வெற்றியில் மீண்டும் ஒரு மகுடமே…….
Saturday, September 16, 2006
நான் தமிழன்
பாதைகள் இல்லையென்று பயணத்தை முடித்துக்கொள்ள
நான் பயணியல்ல, யாத்ரீகன்.
இதுவல்ல என் எல்லை,
இன்னும் எட்டவேண்டிய தூரங்கள் எத்தனையோ, எத்தனையோ
என் பாதங்கள் விழும் இடமெல்லாம் என் பாதைகளாகும்
என் பார்வை விழும் இடமெல்லாம் என் தேசங்களாகும்
ஆம் நான் தமிழன்
மெல்லத்தமிழினிச் சாகுமென்ற கூற்றுகளைக் களைந்தவன் - ஆம்
இதோ ஒரு சான்று – வலைத் தளத்தில் தமிழ்.
நான் பயணியல்ல, யாத்ரீகன்.
இதுவல்ல என் எல்லை,
இன்னும் எட்டவேண்டிய தூரங்கள் எத்தனையோ, எத்தனையோ
என் பாதங்கள் விழும் இடமெல்லாம் என் பாதைகளாகும்
என் பார்வை விழும் இடமெல்லாம் என் தேசங்களாகும்
ஆம் நான் தமிழன்
மெல்லத்தமிழினிச் சாகுமென்ற கூற்றுகளைக் களைந்தவன் - ஆம்
இதோ ஒரு சான்று – வலைத் தளத்தில் தமிழ்.