Tuesday, September 19, 2006
பெரியார் இன்று இருந்தால் ……..

ஆரியம் திராவிடத்தை அடக்கி, அடிமைப்படுத்தி, முட்டள்களாக வைத்திருந்த காலத்தில், ஆரியத்தை எதிர்த்து ஒரு கடும் போராட்டத்தை நடத்தி அதில் வெற்றியும் பெற்றவர் பெரியார். அன்று பெரிய ஆதிக்க சக்தியாக இருந்தது ஆரியம். பெரியாரின் கொள்கைகள் அங்கீகரிக்கப்படவே அவர் சார்ந்தோர் கடினமாக உழைக்க வேண்டியிருந்த காலம் அது. ஆனால் இன்று திராவிடத்தின் அநேக இடங்களிலும் திராவிடனே ஆதிக்க சக்தியாக இருப்பது பெரியார் கண்ட கனவு மெய்ப்பட துவங்கியதற்கான அடையாளமே. இன்று தமிழகத்தில் இருக்கும் ஒரு சில அமைப்புகள் தவிர அனேகமாக அனைத்துக் கட்சிகளுக்குமே அடித்தளமாக இருப்பது பெரியாரியக் கொள்கைகளே. பொல்லாங்கு பேசுபவராக திராவிடர்களாலேயே கருதப்பட்ட ஒருவரது கொள்கைதான் இன்று நாட்டையே வழிநடத்துகிறது என்றால் அது எவ்வளவு பெரிய வெற்றி.
ஆனால், பெரியார் இன்று இருந்தால் அவரது போராட்டம் ஆரியத்தை எதிர்த்த போராட்டமாக இருந்திறுக்காது, திராவிடத்தை எதிர்த்த போராட்டமாகவே இருந்திறுக்கும். ஆம், சற்றே சிந்தித்தோமேயானால் இன்றும் திராவிடன் வென்று விடவில்லை. ஆரியம் வகுத்துக்கொடுத்த பிரிவினையின் அடயாளங்கள் இன்னும் அதிகமாகவே வேறூன்றிவிட்ட காரணத்தால், இங்கே ஒரு பலம் வாய்ந்த திரவிடன் ஒரு பலம் குறைந்த திராவிடனை அடக்கி ஆண்டுகொண்டுதான் இருக்கிறான். பெரியார் இன்று இருந்தால் கண்டிப்பாக அவரது போராட்டம் திராவிடத்தை அடக்கியாளும் திராவிடத்தை எதிர்த்தே இருந்திறுக்கும். பெரியாரியவாதிகளின் இன்றைய கடன் ஆரியத்தை எதிர்த்த போராட்டத்தில் அதிகம் கவனம் செலுத்துவதை விட திராவிடத்தை அடக்கியாளும் திராவிடத்தை எதிர்க்கும் போராட்டத்தில் அதிகம் கவனம் செலுத்தவேண்டும். மேடுபள்ளமில்லாத ஒரு திராவிடம் மலருமேயானால் அது பெரியாரியக் கொள்கைகளின் வெற்றியில் மீண்டும் ஒரு மகுடமே…….
Comments:
<< Home
பெரியார் இன்று இருந்தால் இந்த ஆரியம் திராவிடம் சண்டையை விட்டு விட்டு எல்லோருக்கும் இந்தி சொல்லித்தரச்சொல்லுவார். திராவிடக் கழகங்களின் முட்டாள் தனமான கொள்கைகளில் இதுவும் ஒன்று.
முரளிதரனின் கருத்து மிக காமெடியானது(முட்டாள்தனமானது). பெரியாரையும் கடவுளாக்கி கும்பிடுவாங்கன்னு சொல்றது சரியாத்தான் இருக்கு:(
இந்தியை ஒரு மொழியாக மட்டுமே கருதி இங்கு கூறப்படுகிறது.இன்றைய சூழலில் இந்தி தெரியாதவர்கள் தமிழர்கள் மட்டுமே.முன்பு காலங்களில் இந்தியின் ஆதிக்கம் இருந்திருக்கலாம்.இன்னும் அதை தொடர்வது முட்டாள் தனமானது. அதற்கு வக்காலத்து வாங்கும் முத்துவின் சிந்தனையை என்ன சொல்வது.நாட்டின் வளர்ச்சியைப்பற்றி சிந்திப்பதை விட்டு விட்டு குழம்பிய குட்டையை மீண்டும் மீண்டும் குழப்பி
மீன் பிடிக்க நினைப்பது கேவலமான விசயமல்லாமல் என்ன!. இது நாட்டின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் நிகழ்வுகள்
Post a Comment
மீன் பிடிக்க நினைப்பது கேவலமான விசயமல்லாமல் என்ன!. இது நாட்டின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் நிகழ்வுகள்
<< Home

